சொல்
சொல்
மொழியில் பொருள் தரும் அடிப்படைக்கூறு
சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.
சொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது. [1]
சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்ந்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுவிட்டு 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.[2]
மேலும் நன்னுல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு வேறு மூன்று வகையில் கண்டது. [3]
தொல்காப்பியத்தில் விளக்கம் தொகு
சொல்
நிறைசொல்
பெயர்ச்சொல் வினைச்சொல்
குறைசொல்
இடைச்சொல் உரிச்சொல்
வழங்குநிலை
இயற்சொல் திரிசொல்
திசைச்சொல் வடசொல்
மொழிநிலை
ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி [4]
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் [5] எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
சொல் எனப் படுப பெயரே வினையே என்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே [6] என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்தொருமொழி என்று பெயர்.

Comments
Post a Comment