யாழி
யாளி
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
யாளி மற்றும் குதிரை வீரன்
யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள்.[சான்று தேவை] இவற்றைப் பொதுவாக இந்துக் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் உற்சவர் சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் வருவது வழக்கம்.
சங்க இலக்கியங்களில் யாளி தொகு
இள நாகனார் பாடிய நற்றிணைப் பாடல் ஒன்று யாளி விலங்கினை ஆளி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. அது காட்டில் வாழும் விலங்கு என்றும், அது புலியைக் கொல்லும் என்றும், யானையை அது தன் நகங்களால் பற்றி இழுக்கும் என்றும் அதன் ஆற்றலை விளக்குகிறது. [1] [2] இது அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும்.

Comments
Post a Comment