ஆரோக்கியம்
ஆரோக்கியம் & நல்வாழ்வு 2/14/13Neander Selvan உங்கள் கொலஸ்டிரால் எண்கள் எதை குறிக்கின்றன? உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் 4 விதமான எண்கள் வரும். ஒன்று மொத்த கொலஸ்டிரால். இதன் நார்மல் அளவு 200. இது 200 தாண்டினால் பலரும் "எனக்கு கொலஸ்டிரால் வந்துவிட்டது" என அலறி துடிப்பார்கள். ஆனால் அடிப்படையில் இது அர்த்தமற்ற, பொருளே இல்லாத எண். அடுத்த எண்கள் தான் முக்கியம். அடுத்து எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்டிரால் எண். இது 100க்கு கீழே இருப்பது சிறப்பு. 130 வரை இருப்பது பரவாயில்லை. 130 தான்டினால் ஆபத்து. ஆனால் இதிலும் ஒரு டெக்னிக்கல் விஷயம் இருக்கு. அதை பின்னால் சொல்கிறேன். அடுத்து நல்ல கொலஸ்டிரால் எனப்படும் எச்டிஎல் கொலஸ்டிரால். இது 40க்கு கீழே இருந்தால் மோசம். அறுபதை தாண்டினால் அற்புதம். எச்டிஎல் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு இதய அடைப்பு வரும் வாய்ப்பு மிக குறையும். இறுதியாக வரும் வில்லன் தான் ட்ரைக்ளிசரைட்ஸ். இது 100க்கு கீழே இருப்பது மிக நல்லது 200க்கு கிழே இருப்பது கொஞ்சமா ஓக்கே. 200 தான்டினால் மிக ஆபத்து. 500 தாண்டினால் உயில் எழுதி விடுங்க. இதுநாள்வரை இதைதான் உங்கள் மருத்த...